• Dec 12 2025

நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் பலி!

Chithra / Nov 9th 2025, 10:43 am
image


சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் ஹோட்டல் ஒன்றிலுள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் களனி - தலுகம பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் தனது பெற்றோருடன் நீச்சல் தடாகத்தில் நீராடியபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் பலி சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் ஹோட்டல் ஒன்றிலுள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் களனி - தலுகம பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சிறுவன் தனது பெற்றோருடன் நீச்சல் தடாகத்தில் நீராடியபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement