• Dec 12 2025

சீரழிக்கப்பட்ட அரச சேவை! அரச ஊழியர்களின் தகுதி தொடர்பில் பிரதி அமைச்சரின் அறிவிப்பு

Chithra / Nov 9th 2025, 10:38 am
image

தகுதி அடிப்படையிலேயே எதிர்காலத்தில் அரச ஊழியர்கள் உள்வாங்கப்படுவார்கள் என பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இந்த நாட்டில் அரச துறையானது கடந்த காலங்களில் அரசியல் மயப்படுத்தப்பட்டு, அரசியல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார். 

இவ்வாறு சீரழிக்கப்பட்ட அரச சேவை, பின்னர் பயனற்ற ஒரு சேவையாக மாறிவிட்டதாகவும்,  இதன் காரணமாக சேவையில் பொருத்தமான அரச ஊழியர்கள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, எதிர்காலத்தில் இது போல அரச துறைக்குள், அரசியல் ரீதியான செயற்படுகளுக்கும், சீரழிவுகளுக்கும் இடமில்லை என பிரதி அமைச்சர் தெரிவித்தார். 

இதேவேளை, எதிர்காலத்தில் தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே அரச ஊழியர்களுக்கான  வேலைகள் வழங்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சீரழிக்கப்பட்ட அரச சேவை அரச ஊழியர்களின் தகுதி தொடர்பில் பிரதி அமைச்சரின் அறிவிப்பு தகுதி அடிப்படையிலேயே எதிர்காலத்தில் அரச ஊழியர்கள் உள்வாங்கப்படுவார்கள் என பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டில் அரச துறையானது கடந்த காலங்களில் அரசியல் மயப்படுத்தப்பட்டு, அரசியல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார். இவ்வாறு சீரழிக்கப்பட்ட அரச சேவை, பின்னர் பயனற்ற ஒரு சேவையாக மாறிவிட்டதாகவும்,  இதன் காரணமாக சேவையில் பொருத்தமான அரச ஊழியர்கள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.எனவே, எதிர்காலத்தில் இது போல அரச துறைக்குள், அரசியல் ரீதியான செயற்படுகளுக்கும், சீரழிவுகளுக்கும் இடமில்லை என பிரதி அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, எதிர்காலத்தில் தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே அரச ஊழியர்களுக்கான  வேலைகள் வழங்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement