2025 ஒக்டோபரில் இலங்கைக்கு 712 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணவணுப்பல் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான 10 மாதங்களில் வௌிநாட்டு பணவணுப்பல் மூலம் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 20.1 சதவீதம் அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுற்றுலா வருமானம் 2 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது.
குறிப்பாக, 2025 இன் முதல் ஒன்பது மாதங்களில் மொத்த சுற்றுலா வருமானம் 2.47 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இது 2024 இன் முதல் ஒன்பது மாதங்களில் பதிவான 2.34 பில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 5.3 சதவீதம் அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் மாத்திரம், 32 ஆயிரத்து 815 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
வௌிநாட்டு பணவணுப்பல் முதல் 10 மாதங்களில் 6 பில்லியனை கடந்தது 2025 ஒக்டோபரில் இலங்கைக்கு 712 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணவணுப்பல் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான 10 மாதங்களில் வௌிநாட்டு பணவணுப்பல் மூலம் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 20.1 சதவீதம் அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதேவேளை, மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுற்றுலா வருமானம் 2 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது. குறிப்பாக, 2025 இன் முதல் ஒன்பது மாதங்களில் மொத்த சுற்றுலா வருமானம் 2.47 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. இது 2024 இன் முதல் ஒன்பது மாதங்களில் பதிவான 2.34 பில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 5.3 சதவீதம் அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்தோடு நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் மாத்திரம், 32 ஆயிரத்து 815 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.