பப்ஜி விளையாட்டின் உச்சக்கட்டத்தால் தாய் மற்றும் சகோதரர்களை சுட்டுக்கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் லாகூரின் கஹ்னா பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஜைன் அலி (14) PUBG விளையாட்டில் தீவிரமாக அடிமையாகியிருந்தார்.
விளையாட்டில் அதிக நேரத்தைச் செலவழிப்பதாக அவரது தாயார் நாகித் முபாரக் (45) கண்டித்து வந்தார்.
மேலும், விளையாட்டில் டார்கெட்களை அடைய முடியாதபோது சிறுவன் ஆக்ரோஷமடைவது வேழக்கமாக இருந்நது.
இந்தநிலையில ஒருநாள் பல மணி நேரம் PUBG விளையாடிய சிறுவன், ஒரு இலக்கைத் தவறவிட்டதால் ஆத்திரமடைந்தான். அதேநேரம் தாயாரும் சிறுவனை அதிக நேரம் விளையாட்டில் மூழ்கியிருப்பதாக கண்டித்ததால் சிறுவனின் கோவம் உச்சமடைந்தது.
இதனால் தாயார் நாகித் முபாரக், அண்ணன் தைமூர் (20), மற்றும் இரண்டு சகோதரிகள் மஹ்னூர் (15), ஜன்னத் (10) ஆகியோர் தூங்கிய வேளையில் வீட்டில்இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சிறுவன் அவர்களை சுட்டுக் கொன்றான்.
விளையாட்டின் தாக்கத்தால் இந்தக் கொலையைச்செய்ததாக பொலிஸ்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
குற்றவாளியான சிறுவனுக்கு அவரது வயது காரணமாக, மரண தண்டனைக்குப் பதிலாக நான்கு ஆயுள் தண்டனைகள் (ஒவ்வொரு கொலைக்கும் 25 ஆண்டுகள்) என மொத்தம் 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
தாய் மற்றும் சகோதரர்களை சுட்டுக்கொன்ற சிறுவன்; 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை -PUBG விளையாட்டின் விபரீதம் பப்ஜி விளையாட்டின் உச்சக்கட்டத்தால் தாய் மற்றும் சகோதரர்களை சுட்டுக்கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் லாகூரின் கஹ்னா பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஜைன் அலி (14) PUBG விளையாட்டில் தீவிரமாக அடிமையாகியிருந்தார். விளையாட்டில் அதிக நேரத்தைச் செலவழிப்பதாக அவரது தாயார் நாகித் முபாரக் (45) கண்டித்து வந்தார்.மேலும், விளையாட்டில் டார்கெட்களை அடைய முடியாதபோது சிறுவன் ஆக்ரோஷமடைவது வேழக்கமாக இருந்நது. இந்தநிலையில ஒருநாள் பல மணி நேரம் PUBG விளையாடிய சிறுவன், ஒரு இலக்கைத் தவறவிட்டதால் ஆத்திரமடைந்தான். அதேநேரம் தாயாரும் சிறுவனை அதிக நேரம் விளையாட்டில் மூழ்கியிருப்பதாக கண்டித்ததால் சிறுவனின் கோவம் உச்சமடைந்தது. இதனால் தாயார் நாகித் முபாரக், அண்ணன் தைமூர் (20), மற்றும் இரண்டு சகோதரிகள் மஹ்னூர் (15), ஜன்னத் (10) ஆகியோர் தூங்கிய வேளையில் வீட்டில்இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சிறுவன் அவர்களை சுட்டுக் கொன்றான். விளையாட்டின் தாக்கத்தால் இந்தக் கொலையைச்செய்ததாக பொலிஸ்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.குற்றவாளியான சிறுவனுக்கு அவரது வயது காரணமாக, மரண தண்டனைக்குப் பதிலாக நான்கு ஆயுள் தண்டனைகள் (ஒவ்வொரு கொலைக்கும் 25 ஆண்டுகள்) என மொத்தம் 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.