• Mar 31 2025

2025ம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம்

Chithra / Dec 24th 2024, 10:09 am
image

 

2025ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வேலைத்திட்டத்திற்கென ஒரு மாணவனுக்கு தலா 110/- வீதம் கல்வி அமைச்சு வழங்க உள்ளது.

இது தேசியப் பாடசாலைகள் அல்லாத மாகாணப் பாடசாலையில் ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் இவ்வேலைத்திட்டமாகும்.

இதேவேளை, 2025 ம் ஆண்டுக்கென முதலாம் தர மாணவர்களை உத்தியோகபூர்வமாக பாடசாலைகளில் 

உள்ளெடுப்பதற்கான தேசிய நிகழ்வு ஜனவரி 31 ம் திகதி இடம்பெறுமெனவும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

2025ம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம்  2025ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இவ்வேலைத்திட்டத்திற்கென ஒரு மாணவனுக்கு தலா 110/- வீதம் கல்வி அமைச்சு வழங்க உள்ளது.இது தேசியப் பாடசாலைகள் அல்லாத மாகாணப் பாடசாலையில் ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் இவ்வேலைத்திட்டமாகும்.இதேவேளை, 2025 ம் ஆண்டுக்கென முதலாம் தர மாணவர்களை உத்தியோகபூர்வமாக பாடசாலைகளில் உள்ளெடுப்பதற்கான தேசிய நிகழ்வு ஜனவரி 31 ம் திகதி இடம்பெறுமெனவும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement