சீனாவின் மஞ்சள் நதியின் குறுக்கே கட்டுமானத்தில் இருந்த தொடருந்து பாலம் நேற்று இடிந்து வீழ்ந்ததில், 12 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேரைக் காணவில்லை எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் சிச்சுவான் (Sichuan) - கிவிங்ஹாய் (Qionghai) மாகாணங்களுக்கு இடையேயான தொடருந்து திட்டத்தின் ஒரு பகுதியாக, கிவிங்ஹாய் மாகாணத்தில் மஞ்சள் நதியின் குறுக்கே தொடருந்து பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரும்புக் கம்பியை இறுக்கும் பணியின் போது, கம்பி அறுந்ததால் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
இதையடுத்து, பாலத்தின் மீது பணியில் ஈடுபட்டிருந்த 16 தொழிலாளர்களும் ஆற்றுக்குள் வீழ்ந்தனர்.
இதில், 12 பேர் பலியானதுடன் 4 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை, காணாமல் போன தொழிலாளர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் இடிந்து வீழ்ந்த பாலம்; 12 பேர் பலி - நால்வர் மாயம் சீனாவின் மஞ்சள் நதியின் குறுக்கே கட்டுமானத்தில் இருந்த தொடருந்து பாலம் நேற்று இடிந்து வீழ்ந்ததில், 12 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேரைக் காணவில்லை எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் சிச்சுவான் (Sichuan) - கிவிங்ஹாய் (Qionghai) மாகாணங்களுக்கு இடையேயான தொடருந்து திட்டத்தின் ஒரு பகுதியாக, கிவிங்ஹாய் மாகாணத்தில் மஞ்சள் நதியின் குறுக்கே தொடருந்து பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரும்புக் கம்பியை இறுக்கும் பணியின் போது, கம்பி அறுந்ததால் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. இதையடுத்து, பாலத்தின் மீது பணியில் ஈடுபட்டிருந்த 16 தொழிலாளர்களும் ஆற்றுக்குள் வீழ்ந்தனர். இதில், 12 பேர் பலியானதுடன் 4 பேர் காணாமல் போயுள்ளனர். இதேவேளை, காணாமல் போன தொழிலாளர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.