• Sep 20 2024

ஆடம்பர காலணிகளை அணிந்து வலம் வரும் பிரித்தானிய முதல் பெண்மணி! SamugamMedia

Tamil nila / Feb 22nd 2023, 9:23 pm
image

Advertisement

இந்திய வம்சாவளியினரான பிரித்தானிய முதல் பெண்மணி, 10 டவுனிங் தெருவில் செல்லும்போது லட்சங்கள் மதிப்புள்ள ஆடம்பர செருப்புகளை அணிந்து காணப்பட்டார்.


பிரித்தானியாவின் (UK) முதல் பெண்மணி, இந்திய வம்சாவளி பிரதமரான ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி (Akshata Murty), பகல்நேர ஆடைகள், கோட்டுகள் மற்றும் மாலை ஆடைகளை அணிவது வரையிலான ஃபேஷனுக்கான நேர்த்தியான அணுகுமுறைக்காக பரவலாக அறியப்படுகிறார்.அந்த வரிசையில், அக்ஷதா மூர்த்தி இப்போது JW Anderson மெல்லிய தோல் செருப்புகளை தனது காலில் அணிந்திருப்பதைக் காண முடிந்தது.



செவ்வாய்க்கிழமை (22), தனது மகள்களை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய அக்ஷதா மூர்த்தி, கடினமான லெகிங்ஸ் மற்றும் கோடு போடப்பட்ட தோல் ஜாக்கெட் உள்ளிட்ட கருப்பு நிற ஆடையை அணிந்திருந்தார்.


இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான அக்ஷதா மூர்த்தி, தன் காரிலிருந்து இறங்கி டவுனிங் தெருவுக்குத் திரும்பி வீட்டிற்கு நடந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின.


அறிக்கையின்படி, அவர் அணிந்த JW ஆண்டர்சன் செருப்புகள் பொதுவாக சுமார் 570 பவுண்டுகள் (இலங்கை மதிப்பில் ரூ.2.51 லட்சம்) விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பிறந்த அக்ஷதா மூர்த்தி, இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் முன்னோடியுமாக அறியப்படும் Infosys நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது


ஆடம்பர காலணிகளை அணிந்து வலம் வரும் பிரித்தானிய முதல் பெண்மணி SamugamMedia இந்திய வம்சாவளியினரான பிரித்தானிய முதல் பெண்மணி, 10 டவுனிங் தெருவில் செல்லும்போது லட்சங்கள் மதிப்புள்ள ஆடம்பர செருப்புகளை அணிந்து காணப்பட்டார்.பிரித்தானியாவின் (UK) முதல் பெண்மணி, இந்திய வம்சாவளி பிரதமரான ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி (Akshata Murty), பகல்நேர ஆடைகள், கோட்டுகள் மற்றும் மாலை ஆடைகளை அணிவது வரையிலான ஃபேஷனுக்கான நேர்த்தியான அணுகுமுறைக்காக பரவலாக அறியப்படுகிறார்.அந்த வரிசையில், அக்ஷதா மூர்த்தி இப்போது JW Anderson மெல்லிய தோல் செருப்புகளை தனது காலில் அணிந்திருப்பதைக் காண முடிந்தது.செவ்வாய்க்கிழமை (22), தனது மகள்களை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய அக்ஷதா மூர்த்தி, கடினமான லெகிங்ஸ் மற்றும் கோடு போடப்பட்ட தோல் ஜாக்கெட் உள்ளிட்ட கருப்பு நிற ஆடையை அணிந்திருந்தார்.இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான அக்ஷதா மூர்த்தி, தன் காரிலிருந்து இறங்கி டவுனிங் தெருவுக்குத் திரும்பி வீட்டிற்கு நடந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின.அறிக்கையின்படி, அவர் அணிந்த JW ஆண்டர்சன் செருப்புகள் பொதுவாக சுமார் 570 பவுண்டுகள் (இலங்கை மதிப்பில் ரூ.2.51 லட்சம்) விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பிறந்த அக்ஷதா மூர்த்தி, இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் முன்னோடியுமாக அறியப்படும் Infosys நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement