பிரித்தானிய மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று மாலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.
மன்னர் சில தினங்களுக்கு முன்னர் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்துக்காகச் சிகிச்சை பெற்றபோது அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ள அரண்மனை அவருக்கு எவ்வகையான புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய விவரங்கள் எதையும் வெளியிடப்படவில்லை.
75 வயதுடைய மன்னர் பொதுக் கடமைகளை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனினும் அரச கடமைகளை அவர் மேற்கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மன்னருக்குப் புரோஸ்டேட் சுரப்பியில் புற்று நோய் ஏற்படவில்லை என அரண்மனை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரப்பி வீக்கத்தை அடுத்துச் சிகிச்சைக்காக அவர் ஒரு வார காலம் லண்டன் தனியார் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றிருந்தார். அந்தச் சிகிச்சைகளின் போதே, கவலைக்குரிய புற்றுநோயின் அறிகுறி அடையாளம் காணப்பட்டதாக அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் தங்கியுள்ள இளவரசர் ஹரி தந்தையாரான மன்னருடன் தொலைபேசியில் பேசியதன் பின் அவரைச் சந்திப்பதற்காக பிரித்தானியா திரும்புகிறார் என செய்திகள் தெரிவித்துள்ளன.
மன்னர் சார்ள்ஸ் சிகிச்சை பெற்ற அதே லண்டன் மருத்துவமனையிலேயே வேல்ஸ் இளவரசி கேற்றுக்கும் அடிவயிற்றில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சிகிச்சையின் பின்னர் இளவரசி அரண்மனை திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் – அறிவித்தது பக்கிங்காம் அரண்மனை.samugammedia பிரித்தானிய மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று மாலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.மன்னர் சில தினங்களுக்கு முன்னர் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்துக்காகச் சிகிச்சை பெற்றபோது அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ள அரண்மனை அவருக்கு எவ்வகையான புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய விவரங்கள் எதையும் வெளியிடப்படவில்லை.75 வயதுடைய மன்னர் பொதுக் கடமைகளை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனினும் அரச கடமைகளை அவர் மேற்கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், மன்னருக்குப் புரோஸ்டேட் சுரப்பியில் புற்று நோய் ஏற்படவில்லை என அரண்மனை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரப்பி வீக்கத்தை அடுத்துச் சிகிச்சைக்காக அவர் ஒரு வார காலம் லண்டன் தனியார் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றிருந்தார். அந்தச் சிகிச்சைகளின் போதே, கவலைக்குரிய புற்றுநோயின் அறிகுறி அடையாளம் காணப்பட்டதாக அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அமெரிக்காவில் தங்கியுள்ள இளவரசர் ஹரி தந்தையாரான மன்னருடன் தொலைபேசியில் பேசியதன் பின் அவரைச் சந்திப்பதற்காக பிரித்தானியா திரும்புகிறார் என செய்திகள் தெரிவித்துள்ளன.மன்னர் சார்ள்ஸ் சிகிச்சை பெற்ற அதே லண்டன் மருத்துவமனையிலேயே வேல்ஸ் இளவரசி கேற்றுக்கும் அடிவயிற்றில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சிகிச்சையின் பின்னர் இளவரசி அரண்மனை திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.