பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களாக கிருஷ்ணி ரிஷிகரன் மற்றும் உமா குமரன் ஆகியோர் தொழிற் கட்சி (Labour Party) சார்பில் போட்டியிடவுள்ளனர்.
குறித்த வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த யூன் மாதம் 14 ஆம் திகதி லண்டனில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழினத்தின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிப்பதற்கும் நமது அவலங்களை உலகிற்கு வெளிக்கொணர்வதற்கும் இது ஓர் அரிய சந்தர்ப்பம் எனவும் தமிழர்களாகிய அனைவரும் அனைவரும் ஒன்றுபட்டு இந்த நாட்டுக்கும், முழு உலகுக்கும் நம்மைப் பற்றியும் நமது உரிமைகளைப் பற்றியும் வெளிப்படுத்த எதிர்வரும் யூலை மாதம் 4-ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கலந்துரையாடலில் ஒருங்கிணைந்து முடிவுசெய்யப்பட்டது.
பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தல் 2024 - தமிழ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் கலந்துரையாடல் பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களாக கிருஷ்ணி ரிஷிகரன் மற்றும் உமா குமரன் ஆகியோர் தொழிற் கட்சி (Labour Party) சார்பில் போட்டியிடவுள்ளனர். குறித்த வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த யூன் மாதம் 14 ஆம் திகதி லண்டனில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழினத்தின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிப்பதற்கும் நமது அவலங்களை உலகிற்கு வெளிக்கொணர்வதற்கும் இது ஓர் அரிய சந்தர்ப்பம் எனவும் தமிழர்களாகிய அனைவரும் அனைவரும் ஒன்றுபட்டு இந்த நாட்டுக்கும், முழு உலகுக்கும் நம்மைப் பற்றியும் நமது உரிமைகளைப் பற்றியும் வெளிப்படுத்த எதிர்வரும் யூலை மாதம் 4-ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கலந்துரையாடலில் ஒருங்கிணைந்து முடிவுசெய்யப்பட்டது.