• Apr 02 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் முக்கிய பொருளுடன் சிக்கிய பிரித்தானிய இளைஞன்!

Chithra / Sep 26th 2024, 5:38 pm
image

  

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று  இடம்பெற்றுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடைய பிரித்தானிய பிரஜை என இலங்கை சுங்கப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.

தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையிலேயே அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சந்தேக நபரின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் விமான நிலையத்தில் உள்ள கிரீன் செனலில் இருந்த அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கம் குறிப்பிட்டுள்ளது.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் முக்கிய பொருளுடன் சிக்கிய பிரித்தானிய இளைஞன்   கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கை இன்று  இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடைய பிரித்தானிய பிரஜை என இலங்கை சுங்கப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையிலேயே அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேக நபரின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் விமான நிலையத்தில் உள்ள கிரீன் செனலில் இருந்த அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement