• Jan 16 2025

சகோதரியின் கணவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தம்பி - முல்லைத்தீவில் பரபரப்புச் சம்பவம்

Chithra / Jan 9th 2025, 9:47 am
image

 முல்லைத்தீவு  - ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கூழாமுறிப்பு கிராமத்தில் சட்டவிரோத இடியன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளது.

கூழாமுறிப்பு பகுதியில் அக்காவின் கணவருக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட மனகசப்பு கைக்கலப்பாக மாறியுள்ளது. 

அதனையடுத்து கோபடைந்த தம்பி கத்தியால் அத்தானை வெட்டியுள்ளார். அது பலனளிக்காத நிலையில் காட்டுக்குள் சென்று இரு இடியன் துப்பாக்கிகளை எடுத்து வந்து தனது அக்காவின் கணவருக்கு சுட்டுள்ளார். 

இதன்போது படுகாயமடைந்த அக்காவின் கணவர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும், துப்பாக்கி சூட்டினை நடத்தியவர் தப்பி சென்ற நிலையில், காயமடைந்த நபரிடம் இருந்து மாவட்ட மருத்துவமனை பொலிஸார் வாய்முறைப்பாட்டினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

கூழாமுறிப்பினை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளார். 24 வயதுடைய சந்தேகநபரே

தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். 

சகோதரியின் கணவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தம்பி - முல்லைத்தீவில் பரபரப்புச் சம்பவம்  முல்லைத்தீவு  - ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கூழாமுறிப்பு கிராமத்தில் சட்டவிரோத இடியன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளது.கூழாமுறிப்பு பகுதியில் அக்காவின் கணவருக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட மனகசப்பு கைக்கலப்பாக மாறியுள்ளது. அதனையடுத்து கோபடைந்த தம்பி கத்தியால் அத்தானை வெட்டியுள்ளார். அது பலனளிக்காத நிலையில் காட்டுக்குள் சென்று இரு இடியன் துப்பாக்கிகளை எடுத்து வந்து தனது அக்காவின் கணவருக்கு சுட்டுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அக்காவின் கணவர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.மேலும், துப்பாக்கி சூட்டினை நடத்தியவர் தப்பி சென்ற நிலையில், காயமடைந்த நபரிடம் இருந்து மாவட்ட மருத்துவமனை பொலிஸார் வாய்முறைப்பாட்டினை முன்னெடுத்து வருகின்றார்கள்.கூழாமுறிப்பினை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளார். 24 வயதுடைய சந்தேகநபரேதலைமறைவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.சம்பவம் குறித்து மேலதிக விசாரணகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். 

Advertisement

Advertisement

Advertisement