• Oct 19 2024

எமக்கு பௌத்த மேலாதிக்கமே அச்சுறுத்தலே தவிர வேறு எந்த மதங்களும் அச்சுறுத்தல் இல்லை -ஐங்கரநேசன் கருத்து! samugammedia

Tamil nila / May 3rd 2023, 9:00 pm
image

Advertisement

எமக்கு பௌத்த மேலாதிக்கமே அச்சுறுத்தலே தவிர வேறு எந்த மதங்களும்  அச்சுறுத்தல் இல்லை என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத் தலைவர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.

தையிட்டி விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சட்டவிரோதமாக மக்களுடைய காணியில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்றி தங்களுடைய காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி இன்று மக்கள் போராட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.

 நியாயமான அவர்களின் போராட்டத்திற்கு தலைசாய்க்க வேண்டிய தேவைப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு 

குண்டு.வீசி.எம் மக்களைக் கொலை செய்த இராணுவமும் அரசாங்கமும் தற்பொழுது  கலாசார ரீதியாக , பண்பாடு ரீதியாக , மத ரீதியாக பௌத்த சின்னங்களை அமைப்பதன் மூலமும்  மக்களுடைய நிலங்களை பிடுங்கி மக்களை நிலங்களற்றவர்களாக ஆக்குவதன் மூலமும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொண்டு வருகின்றது.

இவ் இன அழிப்பிற்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும். அரசாங்கம் தமது முகவர்கள் மூலமும் புலனாய்வாளர்கள் மூலமும் திட்டமிட்ட மத ரீதியான சாதி ரீதியான பிரிவினைகளை ஏற்படுத்த முயல்கின்றது. இவை தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும்.

எமக்கு பௌத்த மேலாதிக்கமே அச்சுறுத்தலே தவிர வேறு எந்த மதங்களும்  அச்சுறுத்தல் இல்லை.  எமக்கு சிவ சேனைகளோ உருத்திர சேனைகளோ தேவையில்லை.  இவ்வாறான போராட்டங்களுக்கு தமிழர் சேனையாக திரள்வதன் மூலமே கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிலிருந்து எமது மக்ளையும் எமது  தேசத்தையும் காப்பாற்ற முடியும் - என்றார்

எமக்கு பௌத்த மேலாதிக்கமே அச்சுறுத்தலே தவிர வேறு எந்த மதங்களும் அச்சுறுத்தல் இல்லை -ஐங்கரநேசன் கருத்து samugammedia எமக்கு பௌத்த மேலாதிக்கமே அச்சுறுத்தலே தவிர வேறு எந்த மதங்களும்  அச்சுறுத்தல் இல்லை என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத் தலைவர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.தையிட்டி விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.சட்டவிரோதமாக மக்களுடைய காணியில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்றி தங்களுடைய காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி இன்று மக்கள் போராட்டமொன்றை நடாத்தியுள்ளனர். நியாயமான அவர்களின் போராட்டத்திற்கு தலைசாய்க்க வேண்டிய தேவைப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு குண்டு.வீசி.எம் மக்களைக் கொலை செய்த இராணுவமும் அரசாங்கமும் தற்பொழுது  கலாசார ரீதியாக , பண்பாடு ரீதியாக , மத ரீதியாக பௌத்த சின்னங்களை அமைப்பதன் மூலமும்  மக்களுடைய நிலங்களை பிடுங்கி மக்களை நிலங்களற்றவர்களாக ஆக்குவதன் மூலமும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொண்டு வருகின்றது.இவ் இன அழிப்பிற்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும். அரசாங்கம் தமது முகவர்கள் மூலமும் புலனாய்வாளர்கள் மூலமும் திட்டமிட்ட மத ரீதியான சாதி ரீதியான பிரிவினைகளை ஏற்படுத்த முயல்கின்றது. இவை தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும்.எமக்கு பௌத்த மேலாதிக்கமே அச்சுறுத்தலே தவிர வேறு எந்த மதங்களும்  அச்சுறுத்தல் இல்லை.  எமக்கு சிவ சேனைகளோ உருத்திர சேனைகளோ தேவையில்லை.  இவ்வாறான போராட்டங்களுக்கு தமிழர் சேனையாக திரள்வதன் மூலமே கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிலிருந்து எமது மக்ளையும் எமது  தேசத்தையும் காப்பாற்ற முடியும் - என்றார்

Advertisement

Advertisement

Advertisement