• Sep 23 2024

பௌத்தர்களே குருந்தூர்மலையில் நாளை அணிதிரளுங்கள்...! அழைப்பு விடுத்த உதய கம்மன்பில...! samugammedia

Sharmi / Aug 17th 2023, 10:13 am
image

Advertisement

முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில்  நாளைய தினம் பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில் புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர்மலைப் பகுதியில் ஒன்றிணைய வேண்டும் எனவும் இந்து - பெளத்த மோதலை தடுக்கவும், தமிழ் அடிப்படைவாதிகளைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவி துரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் நேற்று(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்.

நாட்டில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்களுக்கு மாத்திரம் தான் பிரச்சினை உள்ளது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி செயற்படுகிறார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் வடக்கு - கிழக்கு மாகாணங்க ளில் சிறுபான்மை சமூகமாக வாழும் சிங்களவர்களின் இருப்பு கேள்விக்குள் ளாக்கப்படும். பௌத்த மரபுரிமைகள் முழுமையாக தமிழ்ப் பிரிவினைவாதிகளால் அழிக்கப்படும் என்றார்.


பௌத்தர்களே குருந்தூர்மலையில் நாளை அணிதிரளுங்கள். அழைப்பு விடுத்த உதய கம்மன்பில. samugammedia முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில்  நாளைய தினம் பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில் புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர்மலைப் பகுதியில் ஒன்றிணைய வேண்டும் எனவும் இந்து - பெளத்த மோதலை தடுக்கவும், தமிழ் அடிப்படைவாதிகளைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவி துரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் நேற்று(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார். நாட்டில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்களுக்கு மாத்திரம் தான் பிரச்சினை உள்ளது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி செயற்படுகிறார். அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் வடக்கு - கிழக்கு மாகாணங்க ளில் சிறுபான்மை சமூகமாக வாழும் சிங்களவர்களின் இருப்பு கேள்விக்குள் ளாக்கப்படும். பௌத்த மரபுரிமைகள் முழுமையாக தமிழ்ப் பிரிவினைவாதிகளால் அழிக்கப்படும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement