• Sep 17 2024

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த மொட்டு எம்.பிகள்- பத்தாயிரம் வாக்குகள் கூட கிடைக்காது- விஜயதாச சுட்டிக்காட்டு..!

Sharmi / Aug 16th 2024, 9:30 am
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் 92 பாராளுமன்ற  உறுப்பினர்களாலும் பத்தாயிரம் வாக்குகளை கூட ரணிலுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் முன்னாள் நீதி அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் வலுவான அரசியல் கட்சியாக ஒரு காலத்தில் காணப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியவில்லை.

அந்தக் கட்சியின் தலைவருக்கு தேர்தலில் போட்டியிட ஒரு கட்சி கிடைக்கவில்லை.

மறுபுறத்தில் 69 இலட்சம் இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட மொட்டுக் கட்சியினால் வேட்பாளர் ஒருவரைத் தேடிக் கொள்ள முடியாது திண்டாடி இறுதியில் ஒரு வேட்பாளரைக் கண்டுபிடித்துள்ளது.

இதன் மூலம் ஒரு விடயம் தெளிவாகின்றது. பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரில் 25 பேர் கூட அடுத்த தேர்தலில் பாராளுமன்றம் செல்ல மாட்டார்கள்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த 92 உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து 10000 வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.


ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த மொட்டு எம்.பிகள்- பத்தாயிரம் வாக்குகள் கூட கிடைக்காது- விஜயதாச சுட்டிக்காட்டு. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் 92 பாராளுமன்ற  உறுப்பினர்களாலும் பத்தாயிரம் வாக்குகளை கூட ரணிலுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் முன்னாள் நீதி அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டின் வலுவான அரசியல் கட்சியாக ஒரு காலத்தில் காணப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியவில்லை.அந்தக் கட்சியின் தலைவருக்கு தேர்தலில் போட்டியிட ஒரு கட்சி கிடைக்கவில்லை.மறுபுறத்தில் 69 இலட்சம் இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட மொட்டுக் கட்சியினால் வேட்பாளர் ஒருவரைத் தேடிக் கொள்ள முடியாது திண்டாடி இறுதியில் ஒரு வேட்பாளரைக் கண்டுபிடித்துள்ளது.இதன் மூலம் ஒரு விடயம் தெளிவாகின்றது. பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரில் 25 பேர் கூட அடுத்த தேர்தலில் பாராளுமன்றம் செல்ல மாட்டார்கள்.அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த 92 உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து 10000 வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement