• Sep 10 2024

ஜனதிபதிக்கு ஆதரவளிப்பதிலிருந்து பின்வாங்கிய மொட்டு கட்சி எம்.பி.!

Chithra / Aug 13th 2024, 9:16 am
image

Advertisement

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்த மொட்டு கட்சி இராஜாங்க அமைச்சர் ஒருவர் மீண்டும் கட்சிக்குத் திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர இவ்வாறு பொதுஜன முன்னணிக்கு மீண்டும் திரும்புவதாக அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி இது தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் பிரேமலாலுடன் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரேமலால் திஸாநாயக்க, இரத்திரனபுரி மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்ட உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது


ஜனதிபதிக்கு ஆதரவளிப்பதிலிருந்து பின்வாங்கிய மொட்டு கட்சி எம்.பி.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்த மொட்டு கட்சி இராஜாங்க அமைச்சர் ஒருவர் மீண்டும் கட்சிக்குத் திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர இவ்வாறு பொதுஜன முன்னணிக்கு மீண்டும் திரும்புவதாக அறிவித்துள்ளார்.ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி இது தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இரத்தினபுரி மாவட்டத்தின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் பிரேமலாலுடன் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பிரேமலால் திஸாநாயக்க, இரத்திரனபுரி மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்ட உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement