• Sep 10 2024

வெள்ளி முதல் இந்திய – இலங்கை பயணிகள் படகு சேவை - ஆன்லைன் மூலம் இருக்கை முன்பதிவு! வெளியான அறிவிப்பு

Chithra / Aug 13th 2024, 9:08 am
image

Advertisement

 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த பயணிகள் படகுச் சேவை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கசன்துறைக்கு இயக்கப்படும்.

தனியார் நிறுவனம் ஒன்று இந்த பயணிகள் படகு சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதுடன், ஆன்லைன் மூலம் இருக்கை முன்பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் படகு சேவைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தற்போது முடியும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த பயணிகள் படகுச் சேவையானது மே 13 ஆம் திகதி இயக்கப்படுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளி முதல் இந்திய – இலங்கை பயணிகள் படகு சேவை - ஆன்லைன் மூலம் இருக்கை முன்பதிவு வெளியான அறிவிப்பு  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த பயணிகள் படகுச் சேவை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கசன்துறைக்கு இயக்கப்படும்.தனியார் நிறுவனம் ஒன்று இந்த பயணிகள் படகு சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதுடன், ஆன்லைன் மூலம் இருக்கை முன்பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.பயணிகள் படகு சேவைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தற்போது முடியும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த பயணிகள் படகுச் சேவையானது மே 13 ஆம் திகதி இயக்கப்படுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement