• Oct 05 2024

முன்னாள் அமைச்சர் கெஹெலியவை சிறையில் பார்வையிட குவியும் மொட்டுக் கட்சியினர்

Chithra / Feb 8th 2024, 3:25 pm
image

Advertisement

 

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவைப் பார்வையிட்டு நலம் விசாரிப்பதற்காக மொட்டுக் கட்சியின் அரசியல்வாதிகள் படையெடுத்துக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு கட்டமாக குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மொட்டுக் கட்சியின் கண்டி மாவட்ட அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் குழுக்களாக ஒன்று சேர்ந்து சிறைச்சாலைக்கு வந்து கெஹெலியவைப் பார்வையிட்டுச் செல்வதாக அறியக் கிடைத்துள்ளது.

பிரதேச தொடக்கம், முன்னாள் மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத்தின் முன்னாள் , இந்நாள் உறுப்பினர்கள் பலரும் இதில் உள்ளடங்கியுள்ளனர்.

இதற்கிடையே மொட்டுக் கட்சியின் முக்கிய செய்தியொன்றுடன் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் அண்மையில் கெஹெலியவைச் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.


முன்னாள் அமைச்சர் கெஹெலியவை சிறையில் பார்வையிட குவியும் மொட்டுக் கட்சியினர்  முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவைப் பார்வையிட்டு நலம் விசாரிப்பதற்காக மொட்டுக் கட்சியின் அரசியல்வாதிகள் படையெடுத்துக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு கட்டமாக குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தற்போது அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் மொட்டுக் கட்சியின் கண்டி மாவட்ட அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் குழுக்களாக ஒன்று சேர்ந்து சிறைச்சாலைக்கு வந்து கெஹெலியவைப் பார்வையிட்டுச் செல்வதாக அறியக் கிடைத்துள்ளது.பிரதேச தொடக்கம், முன்னாள் மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத்தின் முன்னாள் , இந்நாள் உறுப்பினர்கள் பலரும் இதில் உள்ளடங்கியுள்ளனர்.இதற்கிடையே மொட்டுக் கட்சியின் முக்கிய செய்தியொன்றுடன் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் அண்மையில் கெஹெலியவைச் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement