• Mar 22 2025

வரவு- செலவுத்திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்: காதர் மஸ்தான் ஆதரவு..!

Sharmi / Mar 22nd 2025, 10:20 am
image

பெரும்பான்மை வாக்குகளால் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் மூன்றாவது வாசிப்புக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர் கே. காதர் மஸ்தான் வாக்களித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது கே. காதர் மஸ்தான் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


வரவு- செலவுத்திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்: காதர் மஸ்தான் ஆதரவு. பெரும்பான்மை வாக்குகளால் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் மூன்றாவது வாசிப்புக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர் கே. காதர் மஸ்தான் வாக்களித்தார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது கே. காதர் மஸ்தான் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement