• Sep 17 2024

வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று- ஆச்சரியத்துடன் பார்வையிடும் மக்கள்!*

Tamil nila / Jul 20th 2024, 7:34 am
image

Advertisement

வெள்ளை நிறத்தில் எருமை கன்று குட்டி பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஆச்சரிய சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

ராஜஸ்தான், கரவுளியில் எருமை மாடு ஒன்று வெள்ளை நிறத்தில் ஒரு குட்டியை ஈன்றுள்ளது. இதன் உடலில் ஒரு சிறிய அளவில் கூட கருப்பு நிறமோ, அல்லது வேறு எந்த நிறமோ இல்லை.

அங்குள்ள மச்சானி கிராமத்தில் இந்த கன்று குட்டியைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆச்சரியத்துடன் திரும்பிச் செல்கின்றனர். 

இது குறித்து பேசியுள்ள உரிமையாளர் நீரஜ் ராஜ்புத்,

இந்த நாட்டு இன எருமை மாடு இப்போது தான் முதன்முறையாக குட்டியை ஈன்றுள்ளது. கன்றுக் குட்டி பிறந்ததில் இருந்து ஆரோக்கியமாக இருக்கிறது. அதன் தாய் தனது குட்டியை மிகவும் அரவணைத்துப் பார்த்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

அல்பினிசம் என்ற மரபணு கோளாறு காரணமாக இவ்வாறு எருமை கன்றுக் குட்டி பிறந்துள்ளது. பொதுவாக கண்கள், முடி மற்றும் தோலில் ஒரு சில இடங்களில்தான் இந்த மரபணு கோளாறு பிரதிபலிக்கும்.

ஆனால் உடல் முழுவதும் முற்றிலும் நிறமற்றதாக இருப்பது மிகவும் அரிதானது என்று கால்நடை மருத்துவர் பிரம்ம பிரகாஷ் பாண்டே விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 





வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று- ஆச்சரியத்துடன் பார்வையிடும் மக்கள்* வெள்ளை நிறத்தில் எருமை கன்று குட்டி பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த ஆச்சரிய சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ராஜஸ்தான், கரவுளியில் எருமை மாடு ஒன்று வெள்ளை நிறத்தில் ஒரு குட்டியை ஈன்றுள்ளது. இதன் உடலில் ஒரு சிறிய அளவில் கூட கருப்பு நிறமோ, அல்லது வேறு எந்த நிறமோ இல்லை.அங்குள்ள மச்சானி கிராமத்தில் இந்த கன்று குட்டியைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆச்சரியத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இது குறித்து பேசியுள்ள உரிமையாளர் நீரஜ் ராஜ்புத்,இந்த நாட்டு இன எருமை மாடு இப்போது தான் முதன்முறையாக குட்டியை ஈன்றுள்ளது. கன்றுக் குட்டி பிறந்ததில் இருந்து ஆரோக்கியமாக இருக்கிறது. அதன் தாய் தனது குட்டியை மிகவும் அரவணைத்துப் பார்த்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.அல்பினிசம் என்ற மரபணு கோளாறு காரணமாக இவ்வாறு எருமை கன்றுக் குட்டி பிறந்துள்ளது. பொதுவாக கண்கள், முடி மற்றும் தோலில் ஒரு சில இடங்களில்தான் இந்த மரபணு கோளாறு பிரதிபலிக்கும்.ஆனால் உடல் முழுவதும் முற்றிலும் நிறமற்றதாக இருப்பது மிகவும் அரிதானது என்று கால்நடை மருத்துவர் பிரம்ம பிரகாஷ் பாண்டே விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement