இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 3.28 மணியளவில் ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில் 3 தொடர் நில அதிர்வுகளும் பதிவாகியிருந்ததையடுத்து, அந்நாட்டின் தேசிய புவியியல் மையம் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.
எனினும், பின்னர் அந்த சுனாமி எச்சரிக்கை அறிவிப்பைத் திரும்பப் பெற அந்நாட்டின் தேசிய புவியியல் மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், பல கட்டடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
பல பகுதிகளில் ஒரு மீற்றருக்கும் குறைவான உயரத்தில் சுனாமி அலைகளும் பதிவாகியுள்ளன.
கிழக்கு நுசா தெங்கரா மாகாண ஆளுநர் இமானுவேல் மெல்கியாடெஸ் லகா லெனா, இடிபாடுகள் மீது விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மௌமேரே துறைமுகத்தில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கட்டடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள நாகேகியோ பகுதியில் வசித்த மக்கள், நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே பாதுகாப்புக்காக உயரமான பகுதிகளை நோக்கி விரைந்துள்ளனர்.
“திடீரென நிலம் அதிரத் தொடங்கியதால் நான் பதற்றமடைந்தேன். நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால் நோயாளிகளும் வைத்தியசாலையை விட்டு வெளியேறினர். சில சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டதைப் பார்த்தேன்” என வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கம் ஃப்ளோரஸ் தீவின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டதுடன், பல இடங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் இடிந்த கட்டடங்கள்; இந்தோனேசியாவில் ஐவர் பலி இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 3.28 மணியளவில் ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில் 3 தொடர் நில அதிர்வுகளும் பதிவாகியிருந்ததையடுத்து, அந்நாட்டின் தேசிய புவியியல் மையம் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது. எனினும், பின்னர் அந்த சுனாமி எச்சரிக்கை அறிவிப்பைத் திரும்பப் பெற அந்நாட்டின் தேசிய புவியியல் மையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், பல கட்டடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.பல பகுதிகளில் ஒரு மீற்றருக்கும் குறைவான உயரத்தில் சுனாமி அலைகளும் பதிவாகியுள்ளன.கிழக்கு நுசா தெங்கரா மாகாண ஆளுநர் இமானுவேல் மெல்கியாடெஸ் லகா லெனா, இடிபாடுகள் மீது விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மௌமேரே துறைமுகத்தில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கட்டடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள நாகேகியோ பகுதியில் வசித்த மக்கள், நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே பாதுகாப்புக்காக உயரமான பகுதிகளை நோக்கி விரைந்துள்ளனர்.“திடீரென நிலம் அதிரத் தொடங்கியதால் நான் பதற்றமடைந்தேன். நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால் நோயாளிகளும் வைத்தியசாலையை விட்டு வெளியேறினர். சில சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டதைப் பார்த்தேன்” என வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலநடுக்கம் ஃப்ளோரஸ் தீவின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டதுடன், பல இடங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.