• Feb 15 2025

பாணந்துறை மேம்பாலத்தில் பேருந்து விபத்து!

Tharmini / Feb 15th 2025, 9:57 am
image

பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இன்று  பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதன்படி இன்று (15) அதிகாலை  பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இந்த  பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தே கவிழ்ந்ததாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பாணந்துறை மேம்பாலத்தில் பேருந்து விபத்து பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இன்று  பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.அதன்படி இன்று (15) அதிகாலை  பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இந்த  பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தே கவிழ்ந்ததாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement