• Dec 11 2024

வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!

Chithra / Nov 13th 2024, 4:01 pm
image

 

காலி - சவுத்லேண்ட் பெண்கள் கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் சென்ற காருடன்  மோதி விபத்திற்குள்ளானது.

இன்று (13) காலை புஸ்ஸ – வெல்லமடை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

எவ்வாறு இருப்பினும் இவ்விபத்தில் எவருக்கும் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பொலிஸார்  விபத்துக்குள்ளான பேருந்திலிருந்த வாக்குப் பெட்டிகளை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து  காலி - சவுத்லேண்ட் பெண்கள் கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் சென்ற காருடன்  மோதி விபத்திற்குள்ளானது.இன்று (13) காலை புஸ்ஸ – வெல்லமடை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் இவ்விபத்தில் எவருக்கும் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பொலிஸார்  விபத்துக்குள்ளான பேருந்திலிருந்த வாக்குப் பெட்டிகளை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement