முறையான பொதுப் போக்குவரத்து முறையின்மையால் நாடு வருடாந்தம் 500 ரூபா பில்லியன் இழப்பை சந்திக்கிறது எனவும் வாகன இறக்குமதி மீதான தடைகள் தளர்த்தப்பட்டவுடன் இந்த இழப்பு இரட்டிப்பாகும் எனவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
புதிய கார்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் இறக்குமதியால் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அதனால் ஏற்படும் செலவுகள் மீண்டும் நாட்டிற்கு சுமையாக மாறும் என அவர் எச்சரித்தார்.
இறக்குமதி செய்யப்படும் பஸ்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதால், ஆண்டுதோறும் ஜூலை மாதம் பஸ் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, மக்கள் தொகையில் கால் பகுதியினர் பொது போக்குவரத்தை நம்பியுள்ளனர், பலர் தனியார் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த சவால்களை எதிர்கொள்ள, உயர்தர பேருந்துகளின் இறக்குமதியை உறுதி செய்யும் அதே வேளையில், பொதுப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கெமுனு விஜேரத்ன வலியுறுத்தினார்.
ஆண்டுதோறும் ஜூலை மாதம் பஸ் கட்டணம் உயரும் எச்சரித்த தனியார் பஸ் உரிமையாளர்கள் முறையான பொதுப் போக்குவரத்து முறையின்மையால் நாடு வருடாந்தம் 500 ரூபா பில்லியன் இழப்பை சந்திக்கிறது எனவும் வாகன இறக்குமதி மீதான தடைகள் தளர்த்தப்பட்டவுடன் இந்த இழப்பு இரட்டிப்பாகும் எனவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புதிய கார்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் இறக்குமதியால் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் ஏற்படும் செலவுகள் மீண்டும் நாட்டிற்கு சுமையாக மாறும் என அவர் எச்சரித்தார்.இறக்குமதி செய்யப்படும் பஸ்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதால், ஆண்டுதோறும் ஜூலை மாதம் பஸ் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, மக்கள் தொகையில் கால் பகுதியினர் பொது போக்குவரத்தை நம்பியுள்ளனர், பலர் தனியார் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.இந்த சவால்களை எதிர்கொள்ள, உயர்தர பேருந்துகளின் இறக்குமதியை உறுதி செய்யும் அதே வேளையில், பொதுப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கெமுனு விஜேரத்ன வலியுறுத்தினார்.