• Sep 23 2024

காரைநகர் - யாழ்ப்பாணம் இடையில் மீண்டும் பேருந்து சேவை ஆரம்பமானது...!samugammedia

Anaath / Nov 1st 2023, 5:20 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் மற்றும் காரைநகர் இடையிலான 785/1 பேருந்து சேவை இன்று  மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

இப்பேருந்தானது காரைநகரிலிருந்து பயணத்தை தொடங்கி யாழ். சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடையும் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த காலங்களில் கொரோனா பேரிடர், பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய சில காரணங்களால் சேவையை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொண்டு போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். மேலும் டச்சு வீதியின் சேதங்கள் காரணமாகவும் பேருந்து போக்குவரத்து செய்ய முடியாத நிலை சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து, கடந்த வாரம் டச்சு வீதி புனரமைக்கப்பட்டதோடு பேருந்து போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று முதல் இச்சேவை ஆரம்பிக்கபட்டுள்ளதால் பேருந்தின் நேர அட்டவணையை பின்பற்றி பயனாளிகள் பயன் பெற முடியும். மேலும், பாடசாலை மாணவர்கள், வைத்திய சாலை செல்வோர், யாழ்ப்பாணம் செல்வோர் ஆகியோருக்கு இது மிகவும் பயனுடையதாக இருக்கும்.

மூளாய் டச்சு வீதி ஆரம்பம் முதல் சித்தன்கேணி டச்சு வீதி முடிவு வரையான வீதி பகுதியில் வாழும் மக்களின் போக்குவரத்து வசதியினை இலகுபடுத்துவதே இப் பேருந்து வழித்தடத்தின் பிரதான நோக்காகும் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகர் - யாழ்ப்பாணம் இடையில் மீண்டும் பேருந்து சேவை ஆரம்பமானது.samugammedia யாழ்ப்பாணம் மற்றும் காரைநகர் இடையிலான 785/1 பேருந்து சேவை இன்று  மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.இப்பேருந்தானது காரைநகரிலிருந்து பயணத்தை தொடங்கி யாழ். சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடையும் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த காலங்களில் கொரோனா பேரிடர், பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய சில காரணங்களால் சேவையை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொண்டு போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். மேலும் டச்சு வீதியின் சேதங்கள் காரணமாகவும் பேருந்து போக்குவரத்து செய்ய முடியாத நிலை சுட்டிக்காட்டப்பட்டது.இதனையடுத்து, கடந்த வாரம் டச்சு வீதி புனரமைக்கப்பட்டதோடு பேருந்து போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.இன்று முதல் இச்சேவை ஆரம்பிக்கபட்டுள்ளதால் பேருந்தின் நேர அட்டவணையை பின்பற்றி பயனாளிகள் பயன் பெற முடியும். மேலும், பாடசாலை மாணவர்கள், வைத்திய சாலை செல்வோர், யாழ்ப்பாணம் செல்வோர் ஆகியோருக்கு இது மிகவும் பயனுடையதாக இருக்கும்.மூளாய் டச்சு வீதி ஆரம்பம் முதல் சித்தன்கேணி டச்சு வீதி முடிவு வரையான வீதி பகுதியில் வாழும் மக்களின் போக்குவரத்து வசதியினை இலகுபடுத்துவதே இப் பேருந்து வழித்தடத்தின் பிரதான நோக்காகும் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement