• Sep 22 2024

பாராளுமன்றம் நவம்பர் 7 முதல் 10 வரை கூடும்: 'பட்ஜெட்' 13 இல் தாக்கல்! samugammedia

Tamil nila / Nov 1st 2023, 5:50 pm
image

Advertisement

பாராளுமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

அத்துடன், 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் (ஒதுக்கீட்டுச் சட்டமூலம்) எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் செயலாளர் நாயகம் கூறினார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடிய போதே இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.

அதற்கமைய, 2023 நவம்பர் 07ஆம் திகதி செவ்வாய்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து மு.ப. 10.30 மணிக்கு தஸ்ஸனா பௌத்த சன்விதானய சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படவுள்ளதுடன்,  மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.0 மணி வரை கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றம் நவம்பர் 7 முதல் 10 வரை கூடும்: 'பட்ஜெட்' 13 இல் தாக்கல் samugammedia பாராளுமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.அத்துடன், 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் (ஒதுக்கீட்டுச் சட்டமூலம்) எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் செயலாளர் நாயகம் கூறினார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடிய போதே இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.அதற்கமைய, 2023 நவம்பர் 07ஆம் திகதி செவ்வாய்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனையடுத்து மு.ப. 10.30 மணிக்கு தஸ்ஸனா பௌத்த சன்விதானய சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படவுள்ளதுடன்,  மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.0 மணி வரை கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement