• Apr 28 2026

ஒன்றுடன் ஒன்று மோதிய பேருந்துகள் - பலர் மருத்துவமனையில்!

shanu / Apr 27th 2026, 1:42 pm
image

இ.போ.ச பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இந்த விபத்துச் சம்பவம் தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில்  இன்று (26) காலை 9.20 மணியளவில்  இடம்பெற்றுள்ளது. 


வீதியில் பயணித்துக்கொண்டிருந்த திரும்ப முற்பட்ட வேளையிலேயே இரு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. 


விபத்தில்  11 பேர் காயமடைந்த நிலையில் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பாகத் தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளார். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒன்றுடன் ஒன்று மோதிய பேருந்துகள் - பலர் மருத்துவமனையில் இ.போ.ச பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில்  இன்று (26) காலை 9.20 மணியளவில்  இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்துக்கொண்டிருந்த திரும்ப முற்பட்ட வேளையிலேயே இரு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. விபத்தில்  11 பேர் காயமடைந்த நிலையில் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பாகத் தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளார். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement