தமிழ் கட்சியில் இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்தால் தான் மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலை, திரியாய் பகுதியில் இன்று (26) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் தமழ் கட்சி சார்பில் பிரதிநிதிகளை தெரிவு செய்வதனால் தான் மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசமுடியும். ஜே.வி.பி.யில் தெரிவாகினால் அது நடக்காது. எனவேதான் மக்கள் இம்முறை இதனை கவனத்திற் கொண்டு பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும். திரியாய் பகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன.
குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் பௌத்த விகாரைகளை அமைக்க மக்கள் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தியுள்ளனர். இதுபோன்று தொல்பொருள் திணைக்களம், வன இலாக திணைக்களம், துறை முக அதிகார சபை என பல மக்கள் விவசாய காணிகளை அபகரித்து எல்லையிட்டுள்ளனர்.
இதனை மீட்க தமிழ் பிரதிநிதித்துவம் இந்த மாவட்டத்துக்கும் மண்ணுக்கும் கட்டாயமாக தேவை. இதனால் தான் உங்களிடம் இங்கு வருகை தந்துள்ளோம் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படுகிறது எனவே இம்முறை ஆர்வத்துடன் வாக்களித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தமிழ் கட்சியில் இருந்து தெரிவாக ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என்றார்.
தமிழ் கட்சியில் இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்வதன் மூலமே : உரிமைகளை பாதுகாக்க முடியும் - ச. குகதாசன் தமிழ் கட்சியில் இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்தால் தான் மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.திருகோணமலை, திரியாய் பகுதியில் இன்று (26) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் தமழ் கட்சி சார்பில் பிரதிநிதிகளை தெரிவு செய்வதனால் தான் மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசமுடியும். ஜே.வி.பி.யில் தெரிவாகினால் அது நடக்காது. எனவேதான் மக்கள் இம்முறை இதனை கவனத்திற் கொண்டு பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும். திரியாய் பகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன.குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் பௌத்த விகாரைகளை அமைக்க மக்கள் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தியுள்ளனர். இதுபோன்று தொல்பொருள் திணைக்களம், வன இலாக திணைக்களம், துறை முக அதிகார சபை என பல மக்கள் விவசாய காணிகளை அபகரித்து எல்லையிட்டுள்ளனர்.இதனை மீட்க தமிழ் பிரதிநிதித்துவம் இந்த மாவட்டத்துக்கும் மண்ணுக்கும் கட்டாயமாக தேவை. இதனால் தான் உங்களிடம் இங்கு வருகை தந்துள்ளோம் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படுகிறது எனவே இம்முறை ஆர்வத்துடன் வாக்களித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தமிழ் கட்சியில் இருந்து தெரிவாக ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என்றார்.