தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சட்டமூலம் தொடர்பாக சட்டமா அதிபரின் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனவே, தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதன் பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டமூலத்தை சபையில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி. தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.குறித்த சட்டமூலம் தொடர்பாக சட்டமா அதிபரின் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.எனவே, தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதன் பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.