• Nov 23 2024

வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் வாக்களிக்க முடியுமா? வெளியான அறிவிப்பு

Chithra / Sep 9th 2024, 11:25 am
image

 

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் தபால் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.

நேற்றைய தினம் விசேட தினமாக அறிவிக்கப்பட்டு வாக்காளர் அட்டை விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

எவ்வாறெனினும், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியுமாயின் வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவும் தபால் திணைக்களமும் இணைந்து அதிகாரபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த வாக்காளர் அட்டைகள் கிடைத்தாலும் கிடைக்கப்பெறாவிட்டாலும் வாக்களிப்பதற்கு அது தடையாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வாக்காளர்களுக்கும் இந்த வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறும் என நாம் நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையம் எது என தெரிந்தால், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பித்து வாக்களிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் வாக்களிக்க முடியுமா வெளியான அறிவிப்பு  இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் தபால் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.நேற்றைய தினம் விசேட தினமாக அறிவிக்கப்பட்டு வாக்காளர் அட்டை விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.எவ்வாறெனினும், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியுமாயின் வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணைக்குழுவும் தபால் திணைக்களமும் இணைந்து அதிகாரபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.எனினும் இந்த வாக்காளர் அட்டைகள் கிடைத்தாலும் கிடைக்கப்பெறாவிட்டாலும் வாக்களிப்பதற்கு அது தடையாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.அனைத்து வாக்காளர்களுக்கும் இந்த வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறும் என நாம் நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.வாக்களிப்பு நிலையம் எது என தெரிந்தால், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பித்து வாக்களிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement