யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 35 லட்சம் ரூபாய் பணத்தை பெற்ற நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த அரச ஊழியர் ஒருவர் கனடா செல்வதற்காக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரிடம் சுமார் 35 லட்சம் ரூபாய் பணத்தை 15 தடவைகளில் வழங்கியுள்ளார்.
வங்கி ஊடாகவே இந்த பணத்தை வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை பெற்றுக்கொண்ட நபர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து ஏமாற்றி வந்த நிலையில் பணம் கொடுத்த நபர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கனடா மோகத்தால் வந்த வினை. யாழில் இலட்சங்களை இழந்த அரச ஊழியர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 35 லட்சம் ரூபாய் பணத்தை பெற்ற நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த அரச ஊழியர் ஒருவர் கனடா செல்வதற்காக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரிடம் சுமார் 35 லட்சம் ரூபாய் பணத்தை 15 தடவைகளில் வழங்கியுள்ளார். வங்கி ஊடாகவே இந்த பணத்தை வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத்தை பெற்றுக்கொண்ட நபர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து ஏமாற்றி வந்த நிலையில் பணம் கொடுத்த நபர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.