• Mar 14 2026

அமெரிக்காவால் தான் கனடா உயிர்வாழ்கிறது; ஆனால் நன்றியுணர்வு இல்லை! கடுமையாக தாக்கிய ட்ரம்ப்

Chithra / Jan 23rd 2026, 9:40 am
image

 

அமெரிக்கா இருப்பதால்தான் கனடா இன்று உயிர் வாழ்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து, டாவோஸ் நகரத்தில் நடந்த உலக பொருளாதார மாநாட்டின் (WEF) 56வது ஆண்டு உச்சிமாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  

கனடா நாட்டை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக இணைக்க வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிற நாடுகளை அச்சுறுத்தப் பொருளாதார பலம் தற்போது ஆயுதமாக மாறியுள்ளதாக அமெரிக்காவைக் கனடா பிரதமர் மார்க் கார்னி சாடியிருந்தார்.

உணவு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளில் சுயசார்பு இல்லாத நாடுகள், மற்றவர்களின் தயவில்தான் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை உலக அமைதி மற்றும் சமநிலையை சீர்குலைக்கும் என்றும் எச்சரித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிடமிருந்து ஏராளமான இலவச சலுகைகளைப் பெறும் கனடாவுக்கு நன்றியுணர்வு இல்லை என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார். 

கிரீன்லாந்து மீதான வரி திட்டங்களை எதிர்த்து கனடா எடுத்த நிலைப்பாட்டையும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “Golden Dome” ஏவுகணை பாதுகாப்பு திட்டம் கனடாவையும் பாதுகாக்கும் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப், கனடா பிரதமர் மார்க் கார்னியை தனது புதிய “Board of Peace” என்கிற உலகத் தலைவர்கள் குழுவில் சேர அழைத்திருந்தார்.ஆனால் திடீரென, அவர் அந்த அழைப்பை ட்ரம்ப் திரும்பப் பெற்றுள்ளார். 

அமெரிக்காவால் தான் கனடா உயிர்வாழ்கிறது; ஆனால் நன்றியுணர்வு இல்லை கடுமையாக தாக்கிய ட்ரம்ப்  அமெரிக்கா இருப்பதால்தான் கனடா இன்று உயிர் வாழ்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.சுவிட்சர்லாந்து, டாவோஸ் நகரத்தில் நடந்த உலக பொருளாதார மாநாட்டின் (WEF) 56வது ஆண்டு உச்சிமாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  கனடா நாட்டை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக இணைக்க வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.இதனிடையே கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பிற நாடுகளை அச்சுறுத்தப் பொருளாதார பலம் தற்போது ஆயுதமாக மாறியுள்ளதாக அமெரிக்காவைக் கனடா பிரதமர் மார்க் கார்னி சாடியிருந்தார்.உணவு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளில் சுயசார்பு இல்லாத நாடுகள், மற்றவர்களின் தயவில்தான் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை உலக அமைதி மற்றும் சமநிலையை சீர்குலைக்கும் என்றும் எச்சரித்தார்.இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிடமிருந்து ஏராளமான இலவச சலுகைகளைப் பெறும் கனடாவுக்கு நன்றியுணர்வு இல்லை என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார். கிரீன்லாந்து மீதான வரி திட்டங்களை எதிர்த்து கனடா எடுத்த நிலைப்பாட்டையும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “Golden Dome” ஏவுகணை பாதுகாப்பு திட்டம் கனடாவையும் பாதுகாக்கும் எனக் கூறியுள்ளார்.இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப், கனடா பிரதமர் மார்க் கார்னியை தனது புதிய “Board of Peace” என்கிற உலகத் தலைவர்கள் குழுவில் சேர அழைத்திருந்தார்.ஆனால் திடீரென, அவர் அந்த அழைப்பை ட்ரம்ப் திரும்பப் பெற்றுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement