இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(13) காலை இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில், இலங்கையில் நிலவுகின்ற சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்களும் இதன்போது பரிமாற்றிக் கொள்ளப்பட்டது.
இச் சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) பெற்றிக் பிக்கரிங்கும் (Patrick Pickering) தேசிய மக்கள் சக்தியின் சார்பாக தோழர் விஜித ஹேரத்தும் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடா உயர்ஸ்தானிகர்- அநுர திடீர் சந்திப்பு. முக்கிய விடயங்கள் தொடர்பிலும் ஆராய்வு. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(13) காலை இடம்பெற்றது.கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில், இலங்கையில் நிலவுகின்ற சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்களும் இதன்போது பரிமாற்றிக் கொள்ளப்பட்டது.இச் சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) பெற்றிக் பிக்கரிங்கும் (Patrick Pickering) தேசிய மக்கள் சக்தியின் சார்பாக தோழர் விஜித ஹேரத்தும் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.