• Nov 28 2024

ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது...! தயாசிறி திட்டவட்டம்...! samugammedia

Sharmi / Dec 28th 2023, 8:33 am
image

எதிர்வரும் அரசியல் செயற்பாடுகளுக்காக தமக்கு பல கட்சிகளில் இருந்து அழைப்புகள் வந்துள்ள போதிலும், இதுவரை எவரிடமும் உறுதியளிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அந்த தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும், அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டை வலுவாக வழிநடத்தக்கூடிய குழுவுடன் பயணிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், தாம் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருப்பதால், கட்சி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

பொருளாதார மரணப் படுக்கைகளை விற்று மக்கள் மீது வரி விதித்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது.

நாடு வங்குரோத்து நிலையில் உள்ள நிலையில், அரசியலில் இல்லாத பிரமுகர்களை சோதனையிட எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்த வேண்டாம் என்பதே மக்களின் வேண்டுகோளாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது. தயாசிறி திட்டவட்டம். samugammedia எதிர்வரும் அரசியல் செயற்பாடுகளுக்காக தமக்கு பல கட்சிகளில் இருந்து அழைப்புகள் வந்துள்ள போதிலும், இதுவரை எவரிடமும் உறுதியளிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், அந்த தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும், அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டை வலுவாக வழிநடத்தக்கூடிய குழுவுடன் பயணிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், தாம் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருப்பதால், கட்சி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார மரணப் படுக்கைகளை விற்று மக்கள் மீது வரி விதித்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது.நாடு வங்குரோத்து நிலையில் உள்ள நிலையில், அரசியலில் இல்லாத பிரமுகர்களை சோதனையிட எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்த வேண்டாம் என்பதே மக்களின் வேண்டுகோளாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement