• Jul 27 2024

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக நேசித்தவர் புரட்சிக் கலைஞன் கேப்டன் விஜயகாந்...! சபா.குகதாஸ் இரங்கல்...!samugammedia

Sharmi / Dec 29th 2023, 8:41 am
image

Advertisement

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக நேசித்தவர் புரட்சிக் கலைஞன் கேப்டன் விஜயகாந் என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ்  தெரிவித்துள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் கப்டன் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையிலேயே சபா.குகதாஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மக்கள் திலகம் MGR க்கு அடுத்து ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக நேசித்தவர் புரட்சிக் கலைஞன் கேப்டன் விஜயகாந் .

ஈழத் தமிழர் விடுதலை போராட்டத்தை உயிராக நேசித்தார் என்பதற்கு விஜயகாந்தின் நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன் என்ற பெயரில் வெளியாகியதுடன்  தன்னுடைய மூத்த மகனுக்கு விஜய் பிரபாகரன் என பெயர் வைத்தமை சிறந்த எடுத்துக் காட்டு  இவற்றுக்கு அப்பால் தன்னால் இயன்ற நிதி உதவியையும் விடுதலைப் போராட்டத்திற்கு வாரி வழங்கிய வள்ளல் அத்துடன் ஏழைகளுக்கு வாரி வழங்கிய ஏழைகளின் தலைவன்.

திரைப்படத்திலும் அரசியலிலும்  நிஜ வாழ்க்கையிலும் ஒரே பேச்சு அதே சிந்தனை இவையே அவரது சிறப்பு.  அன்னாரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும்  ஈழதேசம் மறவாது.

எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக நேசித்தவர் புரட்சிக் கலைஞன் கேப்டன் விஜயகாந். சபா.குகதாஸ் இரங்கல்.samugammedia ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக நேசித்தவர் புரட்சிக் கலைஞன் கேப்டன் விஜயகாந் என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ்  தெரிவித்துள்ளார்.தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் கப்டன் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையிலேயே சபா.குகதாஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,மக்கள் திலகம் MGR க்கு அடுத்து ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக நேசித்தவர் புரட்சிக் கலைஞன் கேப்டன் விஜயகாந் .ஈழத் தமிழர் விடுதலை போராட்டத்தை உயிராக நேசித்தார் என்பதற்கு விஜயகாந்தின் நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன் என்ற பெயரில் வெளியாகியதுடன்  தன்னுடைய மூத்த மகனுக்கு விஜய் பிரபாகரன் என பெயர் வைத்தமை சிறந்த எடுத்துக் காட்டு  இவற்றுக்கு அப்பால் தன்னால் இயன்ற நிதி உதவியையும் விடுதலைப் போராட்டத்திற்கு வாரி வழங்கிய வள்ளல் அத்துடன் ஏழைகளுக்கு வாரி வழங்கிய ஏழைகளின் தலைவன்.திரைப்படத்திலும் அரசியலிலும்  நிஜ வாழ்க்கையிலும் ஒரே பேச்சு அதே சிந்தனை இவையே அவரது சிறப்பு.  அன்னாரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும்  ஈழதேசம் மறவாது.எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement