• May 08 2026

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார்; மயிரிழையில் உயிர் தப்பிய கணவன், மனைவி! அதிகாலையில் துயரம்

Chithra / Oct 19th 2025, 8:24 am
image

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இச் சம்பவம் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மின்சார சபையின் மின்கம்பங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலைக்கு திருமண வீடொன்றுக்கு பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார்; மயிரிழையில் உயிர் தப்பிய கணவன், மனைவி அதிகாலையில் துயரம் திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.இச் சம்பவம் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.விபத்தில் மின்சார சபையின் மின்கம்பங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலைக்கு திருமண வீடொன்றுக்கு பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement