• Sep 17 2024

வீதியை விட்டு விலகி 25 அடி பாய்ந்து, வீட்டின் கூரை மீது விழுந்த கார்! பெண் காயம்

Chithra / Aug 8th 2024, 3:34 pm
image

Advertisement


மொரவக்க - அலபதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக மொரவக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. 

நெலுவயிலிருந்து மொரவக்க நோக்கி சென்றுகொண்டிருந்த கார், வீதியை விட்டு விலகி, சுமார் 25 அடி பாய்ந்து, வீடொன்றின் கூரை மீது விழுந்துள்ளது.

இவ்விபத்தினால் வீட்டின் பல கூரைத் தகடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வீதியை விட்டு விலகி 25 அடி பாய்ந்து, வீட்டின் கூரை மீது விழுந்த கார் பெண் காயம் மொரவக்க - அலபதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக மொரவக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. நெலுவயிலிருந்து மொரவக்க நோக்கி சென்றுகொண்டிருந்த கார், வீதியை விட்டு விலகி, சுமார் 25 அடி பாய்ந்து, வீடொன்றின் கூரை மீது விழுந்துள்ளது.இவ்விபத்தினால் வீட்டின் பல கூரைத் தகடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் காயமடைந்த பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement