கேரட் விலை அதிகரித்து காணப்பட்டால் அதனை புறக்கணித்து வேறு மரக்கறிகளை உண்ணுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாட்டில் கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக லீக்ஸ் கரட் வெங்காயம் போஞ்சி கோவா உள்ளிட்டவற்றின் விலைகள் ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அதேவேளை கேரட் விலை சில தினங்களாக இரண்டாயிரம் ரூபாவை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மரக்கறி விலைகள் வானமளவிற்கு உயர்ந்துள்ளதுடன் வரலாறு காணாத வகையில் கேரட் விலை அதிகரித்துள்ளது உண்மைதான். அதற்கு மாற்று வழிகளை நாம் பின்பற்ற வேண்டும். கேரட் தான் சாப்பிடனும் என்று அவசியம் இல்லை. வேறு எதுவும் சாப்பிடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
உச்சத்தை தொட்ட கேரட் விலை. வேறு மரக்கறிகளை உண்ணுங்கள். பிரசன்ன ஆலோசனை.samugammedia கேரட் விலை அதிகரித்து காணப்பட்டால் அதனை புறக்கணித்து வேறு மரக்கறிகளை உண்ணுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நாட்டில் கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.குறிப்பாக லீக்ஸ் கரட் வெங்காயம் போஞ்சி கோவா உள்ளிட்டவற்றின் விலைகள் ஆயிரத்தை தாண்டியுள்ளது.அதேவேளை கேரட் விலை சில தினங்களாக இரண்டாயிரம் ரூபாவை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.இந்நிலையில், மரக்கறி விலைகள் வானமளவிற்கு உயர்ந்துள்ளதுடன் வரலாறு காணாத வகையில் கேரட் விலை அதிகரித்துள்ளது உண்மைதான். அதற்கு மாற்று வழிகளை நாம் பின்பற்ற வேண்டும். கேரட் தான் சாப்பிடனும் என்று அவசியம் இல்லை. வேறு எதுவும் சாப்பிடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.