• Apr 02 2025

காசா சிறுவர் நிதியம் - இனி நன்கொடைகளை வைப்பிலிட வேண்டாம்! ஜனாதிபதி செயலகம்

Chithra / Aug 1st 2024, 11:30 am
image


காசா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் 2024 ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இனியும் அதற்காக நன்கொடைகளை வைப்பிலிட வேண்டாம் என பொது மக்களிடம் ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் 2024 ஜூலை 31 ஆம் திகதிக்குப் பின்னர் எவரேனும் ஜனாதிபதி செயலகத்தின் வங்கிக் கணக்கில் நிதி வைப்புச் செய்யும் பட்சத்தில் அந்த நிதியானது சமூக நிவாரணச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திடம் கையளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

காசா சிறுவர் நிதியம் - இனி நன்கொடைகளை வைப்பிலிட வேண்டாம் ஜனாதிபதி செயலகம் காசா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் 2024 ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.இனியும் அதற்காக நன்கொடைகளை வைப்பிலிட வேண்டாம் என பொது மக்களிடம் ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.அத்துடன் 2024 ஜூலை 31 ஆம் திகதிக்குப் பின்னர் எவரேனும் ஜனாதிபதி செயலகத்தின் வங்கிக் கணக்கில் நிதி வைப்புச் செய்யும் பட்சத்தில் அந்த நிதியானது சமூக நிவாரணச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திடம் கையளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement