• May 05 2024

நாடு வீழ்ச்சியடைய மத்திய வங்கியே பிரதான காரணம்..! நீதி அமைச்சர் குற்றச்சாட்டு

Chithra / Feb 16th 2024, 9:09 am
image

Advertisement



நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைய மத்திய வங்கியே பிரதான காரணமாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

அஜித் நிவாட் கப்ரால் ஆளுநராக இருந்த காலத்தில் இருந்து நாட்டின் அந்நிய செலாவணி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்தது. 

அதனால் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு மத்திய வங்கியின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாமல்போனது.

அரச வங்கிகள் சாதாரண மக்கள் தொடர்பில் கண்டுகொள்வதில்லை. அதனால் தான் அந்த மக்கள் கறுப்பு வியாபாரிகளை நாடி, தங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு பாரிய வட்டித்தொகைக்கு கடன் பெறுகின்றனர்.

இதனால் சாதாரண வியாபாரிகள் விவசாயிகள் தங்களின் தொழிலில் நட்டம் ஏற்படும்போது அவர்கள் அந்த தொழிலை விட்டுவிடும் நிலைக்கு செல்கின்றனர். 

அதனால் தான் இன்று நாட்டில் விவசாயம் செய்பவர்களின் வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதனால் இது தொடர்பாக மத்திய வங்கி கொள்கை ரீதியில் இது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டு அதனை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் அது தொடர்பான சட்டங்களை அனுமதித்துக்கொள்ள எமக்கு நடவடிக்கை எடுக்க முடியும். என்றும் தெரிவித்துள்ளார்.

நாடு வீழ்ச்சியடைய மத்திய வங்கியே பிரதான காரணம். நீதி அமைச்சர் குற்றச்சாட்டு நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைய மத்திய வங்கியே பிரதான காரணமாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அஜித் நிவாட் கப்ரால் ஆளுநராக இருந்த காலத்தில் இருந்து நாட்டின் அந்நிய செலாவணி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்தது. அதனால் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு மத்திய வங்கியின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாமல்போனது.அரச வங்கிகள் சாதாரண மக்கள் தொடர்பில் கண்டுகொள்வதில்லை. அதனால் தான் அந்த மக்கள் கறுப்பு வியாபாரிகளை நாடி, தங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு பாரிய வட்டித்தொகைக்கு கடன் பெறுகின்றனர்.இதனால் சாதாரண வியாபாரிகள் விவசாயிகள் தங்களின் தொழிலில் நட்டம் ஏற்படும்போது அவர்கள் அந்த தொழிலை விட்டுவிடும் நிலைக்கு செல்கின்றனர். அதனால் தான் இன்று நாட்டில் விவசாயம் செய்பவர்களின் வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.அதனால் இது தொடர்பாக மத்திய வங்கி கொள்கை ரீதியில் இது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டு அதனை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் அது தொடர்பான சட்டங்களை அனுமதித்துக்கொள்ள எமக்கு நடவடிக்கை எடுக்க முடியும். என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement