• Nov 24 2024

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய முடிவு..!

Chithra / May 29th 2024, 8:33 am
image

 

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால், வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மாற்றியமைக்கவில்லை.

ஏற்கனவே சில வாகனங்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

வாகனங்களின் இறக்குமதியை படிப்படியாக எளிதாக்குவது முக்கியமான முடிவு.

இதன்மூலம் அன்னியச் செலாவணியை எங்களால் நிர்வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். என்றும் தெரிவித்துள்ளார்.

சந்தை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சந்தை வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனங்கள் வெகுவிரைவில் குறைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய முடிவு.  வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால், வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என மத்திய வங்கி அறிவித்துள்ளது.குறித்த தகவலை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மாற்றியமைக்கவில்லை.ஏற்கனவே சில வாகனங்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.வாகனங்களின் இறக்குமதியை படிப்படியாக எளிதாக்குவது முக்கியமான முடிவு.இதன்மூலம் அன்னியச் செலாவணியை எங்களால் நிர்வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். என்றும் தெரிவித்துள்ளார்.சந்தை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.சந்தை வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனங்கள் வெகுவிரைவில் குறைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement