சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேவேளை அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப் பணிகளைத் தொடருமாறு ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையமும் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிடுகின்றது.
அதேவேளை தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12224 குடும்பங்களை சேர்ந்த 45239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்.அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை. சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அதேவேளை அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப் பணிகளைத் தொடருமாறு ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.அத்துடன் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையமும் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிடுகின்றது.அதேவேளை தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12224 குடும்பங்களை சேர்ந்த 45239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.