• Jul 06 2025

போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய பொலிஸார்

Chithra / Jul 6th 2025, 8:30 am
image


மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 

குறித்த மோட்டார் சைக்கிள்கள், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் செலுத்தல், இலக்கத் தகடுகள் இன்றி பயணித்தல், உரிய ஆவணங்கள் இன்றி பலரைக் கொண்டு பயணித்தல், வேகக்கட்டுப்பாடுகள் இன்றி வாகனம் செலுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக கைப்பற்றப்பட்டுள்ளன.

பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய பொலிஸார் மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. குறித்த மோட்டார் சைக்கிள்கள், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் செலுத்தல், இலக்கத் தகடுகள் இன்றி பயணித்தல், உரிய ஆவணங்கள் இன்றி பலரைக் கொண்டு பயணித்தல், வேகக்கட்டுப்பாடுகள் இன்றி வாகனம் செலுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக கைப்பற்றப்பட்டுள்ளன.பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement