இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள் நாளை (26) அடையாள பணிபுறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் நாளை (26) நண்பகல் 12 மணி முதல் மாலை 6.00 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளன.
தமது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த போராட்டம் காரணமாக மின்சார சபையின் நாளாந்த சேவைகள் மற்றும் பராமரிப்புப் பணிகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள் நாளை (26) அடையாள பணிபுறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் நாளை (26) நண்பகல் 12 மணி முதல் மாலை 6.00 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன. இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளன.தமது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.குறித்த போராட்டம் காரணமாக மின்சார சபையின் நாளாந்த சேவைகள் மற்றும் பராமரிப்புப் பணிகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.