• Sep 06 2025

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

Aathira / Sep 6th 2025, 10:52 am
image

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள "சட்டப்படி வேலை செய்யும்" தொழிற்சங்க நடவடிக்கை இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்நடவடிக்கையில் ஒரு ஊழியரும் தன்னார்வ ஓய்வு திட்டத்திற்கு உடன்படவில்லை என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.

மேலும்,  செப்டம்பர் 15ம் திகதிவரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடரும், 

தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற மற்றும் வெளிப்படையற்ற செயல்முறைகள் காரணமாக இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்டது ,

இது தொடர்பில் நேற்று அமைச்சருடன் கலந்துரையாடினோம். 

ஆனால், அதற்கு  திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள "சட்டப்படி வேலை செய்யும்" தொழிற்சங்க நடவடிக்கை இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.இந்நடவடிக்கையில் ஒரு ஊழியரும் தன்னார்வ ஓய்வு திட்டத்திற்கு உடன்படவில்லை என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.மேலும்,  செப்டம்பர் 15ம் திகதிவரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடரும், தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற மற்றும் வெளிப்படையற்ற செயல்முறைகள் காரணமாக இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்டது ,இது தொடர்பில் நேற்று அமைச்சருடன் கலந்துரையாடினோம். ஆனால், அதற்கு  திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement