• Apr 16 2026

நாட்டில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு!

shanu / Oct 5th 2025, 7:45 am
image

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய பலத்த  மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


வளிமண்டலவியல் திணைக்களத்ததால் இன்று (5) காலை  வெளியிடப்பட்டுள்ள வானிலை  அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வுகூறப்பட்டுள்ளது. 


அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, 


நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுகின்றது 


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். 


மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். 


எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய பலத்த  மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்ததால் இன்று (5) காலை  வெளியிடப்பட்டுள்ள வானிலை  அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வுகூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுகின்றது மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement