• Jan 25 2025

முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Chithra / Jan 1st 2025, 9:18 am
image

 

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தமது புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த நவம்பர் மாதத்தில் மறை 2.1 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் மறை 1.7 சதவீதமாக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன், நவம்பர் மாதத்தில் மறை 3.3 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம் டிசம்பரில் மறை 3 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

மேலும் கடந்த நவம்பர் மாதம் 0.6 வீதமாக இருந்த உணவு பணவீக்கம் இந்த மாதம் சிறியளவு அதிகரித்து 0.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.   

முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்  கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தமது புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.இதற்கமைய, கடந்த நவம்பர் மாதத்தில் மறை 2.1 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் மறை 1.7 சதவீதமாக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.அத்துடன், நவம்பர் மாதத்தில் மறை 3.3 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம் டிசம்பரில் மறை 3 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.மேலும் கடந்த நவம்பர் மாதம் 0.6 வீதமாக இருந்த உணவு பணவீக்கம் இந்த மாதம் சிறியளவு அதிகரித்து 0.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement

Buy Now