• Jan 02 2025

பாடசாலை நாட்களின் எண்ணிக்கையில் அதிரடி மாற்றம்!

Chithra / Dec 30th 2024, 9:43 am
image

2025 ஆம் ஆண்டு பாடசாலை பருவ நாட்கள் எண்ணிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


அரசாங்கம் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும், பாடசாலை நாட்களை அடுத்த வருடம் (2025) 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதிகளவிலான அரசு விடுமுறைகள் மற்றும் முதல் தவணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் அரசுப் பாடசாலைகளில் ஆண்டுதோறும் கல்வி பயிலும் மாணவர்களின் வருகை திகதி குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்வதற்கு, ஜனவரி 2 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பாடசாலையின் முதல் 03 வாரங்கள் நடைபெறவுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக அடுத்த ஆண்டுக்கான கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த ஆண்டுக்கு 26 பொது விடுமுறைகள் உள்ளன, அதில் 4 நாட்கள் மட்டுமே வார இறுதி நாட்கள்.

ஏனைய அனைத்தும் வாரநாட்களாக இருப்பதால் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த இயலாது, இதனால் பாடசலைகள் நடத்தும் நாட்கள் 181 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை நாட்களின் எண்ணிக்கையில் அதிரடி மாற்றம் 2025 ஆம் ஆண்டு பாடசாலை பருவ நாட்கள் எண்ணிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அரசாங்கம் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும், பாடசாலை நாட்களை அடுத்த வருடம் (2025) 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.அதிகளவிலான அரசு விடுமுறைகள் மற்றும் முதல் தவணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் அரசுப் பாடசாலைகளில் ஆண்டுதோறும் கல்வி பயிலும் மாணவர்களின் வருகை திகதி குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்வதற்கு, ஜனவரி 2 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பாடசாலையின் முதல் 03 வாரங்கள் நடைபெறவுள்ளது.தொழில்நுட்ப ரீதியாக அடுத்த ஆண்டுக்கான கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும், அடுத்த ஆண்டுக்கு 26 பொது விடுமுறைகள் உள்ளன, அதில் 4 நாட்கள் மட்டுமே வார இறுதி நாட்கள்.ஏனைய அனைத்தும் வாரநாட்களாக இருப்பதால் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த இயலாது, இதனால் பாடசலைகள் நடத்தும் நாட்கள் 181 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement