• Nov 28 2024

சங்கானை பிரதேச செயலகம் மற்றும் புலம்பெயர் தேச நிதிப்பங்களிப்பில் துணவியில் வீடு கையளிப்பு!

Tamil nila / Jun 22nd 2024, 7:12 pm
image

சங்கானை பிரதேச செயலகம் மற்றும் புலம்பெயர் தேசத்தை சேர்ந்த விஸ்வநாதன் கலொக் தபோதரன்  நிதிப் பங்களிப்பில்  துணவியில்  வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு  வீடு ஒன்று  கையளிக்கப்பட்டது.

நிரந்தர வீடு இன்றி வசித்து வந்த 9 அங்கத்தவர்களை கொண்ட துணவி பகுதியினை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு சங்கானை  பிரதேச செயலகத்தினால் ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் புலம்பெயர் தேசத்தவரான விஸ்வநாதன் கலொக் தபோதரனால் 1 மில்லியன் ரூபாய் வழங்கபட்டது. 

இந்நிலையில் கிடைக்கபெற்ற நிதிக்கு அமைவாக கூலியின்றி காரைநகர் பிரதேச இராணுவத்தினரின் விசேட மனித வலு பங்களிப்புடன் வீடு கட்டப்பட்ஹடு இன்றைய தினம் பயனாளிகளுக்கு வீடு சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது

இதன் பொழுது சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார், புலம்பெயர் நிதிப்பங்களார் தபோதரன், இராணுவ அதிகாரிகள், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம அலுவலர்கள், பயனாளிகள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




சங்கானை பிரதேச செயலகம் மற்றும் புலம்பெயர் தேச நிதிப்பங்களிப்பில் துணவியில் வீடு கையளிப்பு சங்கானை பிரதேச செயலகம் மற்றும் புலம்பெயர் தேசத்தை சேர்ந்த விஸ்வநாதன் கலொக் தபோதரன்  நிதிப் பங்களிப்பில்  துணவியில்  வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு  வீடு ஒன்று  கையளிக்கப்பட்டது.நிரந்தர வீடு இன்றி வசித்து வந்த 9 அங்கத்தவர்களை கொண்ட துணவி பகுதியினை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு சங்கானை  பிரதேச செயலகத்தினால் ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் புலம்பெயர் தேசத்தவரான விஸ்வநாதன் கலொக் தபோதரனால் 1 மில்லியன் ரூபாய் வழங்கபட்டது. இந்நிலையில் கிடைக்கபெற்ற நிதிக்கு அமைவாக கூலியின்றி காரைநகர் பிரதேச இராணுவத்தினரின் விசேட மனித வலு பங்களிப்புடன் வீடு கட்டப்பட்ஹடு இன்றைய தினம் பயனாளிகளுக்கு வீடு சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டதுஇதன் பொழுது சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார், புலம்பெயர் நிதிப்பங்களார் தபோதரன், இராணுவ அதிகாரிகள், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம அலுவலர்கள், பயனாளிகள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement