ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 சுமத்திய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னேற்றம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எப்போது நாடாளுமன்றுக்கும் மக்களுக்கும் கிடைக்கும் என்பதை சபைக்கு தெரிவிக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சனல் 4 சுமத்திய அதே குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தமைக்கான காரணத்தை விளக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவால் ஏற்பட்ட முன்னேற்றம் அல்லது முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், அதற்கான காரணங்கள் மற்றும் தெரிவுக்குழுவின் வரம்பு குறித்து விளக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை அரசாங்கம் தொடர்ச்சியாக புறக்கணிக்க காரணம் என்ன என்பதை விளக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சனல் 4 குற்றச்சாட்டு: விசாரணைகளுக்கு என்ன ஆனது ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 சுமத்திய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னேற்றம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரியுள்ளார்.ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எப்போது நாடாளுமன்றுக்கும் மக்களுக்கும் கிடைக்கும் என்பதை சபைக்கு தெரிவிக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் சனல் 4 சுமத்திய அதே குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தமைக்கான காரணத்தை விளக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இதன் பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவால் ஏற்பட்ட முன்னேற்றம் அல்லது முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், அதற்கான காரணங்கள் மற்றும் தெரிவுக்குழுவின் வரம்பு குறித்து விளக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை அரசாங்கம் தொடர்ச்சியாக புறக்கணிக்க காரணம் என்ன என்பதை விளக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.