• Nov 23 2024

ஒன்றரை வயது குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம் - குழந்தையின் நிலை என்ன?

Tamil nila / Mar 25th 2024, 10:48 pm
image

ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்திரத்தை தீயணைப்புத் துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக  அகற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சென்னை போரூரில் வசித்து வருபவர்கள் கார்த்திக்-ஆனந்தி. இந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை கிருத்திக்.  இவர் வழக்கம்போல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.அப்போது ஒரு பாத்திரத்தில் குழந்தை தன் தலையை விட்டதாக கூறப்படுகிறது.

எவ்வளவுவோ முயற்சித்தும் குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரைத்தை பெற்றோரால் அகற்ற முடியவில்லை. 

பின்னர்  இதுதொடர்பாக மதுரவாயல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை ராட்சத கத்திரி கொண்டு வெட்டியெடுத்து குழந்தையை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்டனர்.

குறித்த இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஒன்றரை வயது குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம் - குழந்தையின் நிலை என்ன ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்திரத்தை தீயணைப்புத் துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக  அகற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சென்னை போரூரில் வசித்து வருபவர்கள் கார்த்திக்-ஆனந்தி. இந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை கிருத்திக்.  இவர் வழக்கம்போல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.அப்போது ஒரு பாத்திரத்தில் குழந்தை தன் தலையை விட்டதாக கூறப்படுகிறது.எவ்வளவுவோ முயற்சித்தும் குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரைத்தை பெற்றோரால் அகற்ற முடியவில்லை. பின்னர்  இதுதொடர்பாக மதுரவாயல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை ராட்சத கத்திரி கொண்டு வெட்டியெடுத்து குழந்தையை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்டனர்.குறித்த இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement

Advertisement

Advertisement